எம்.ஜி. சுரேஷ் பின் நவீனத்துவ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். நாவல், சிறுகதை, கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று முழுநேர இலக்கியவாதியாக இயங்கி வருகிறார். இவரது 'இரண்டாவது உலகைத் தேடி' என்கிற சிறுகதைத் தொகுப்பு 1981-இல் வெளிவந்தது. 1984-இல் 'தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக் கூடுகள்' எனும் நாவலும், 1985-இல் 'கான்கிரீட் வானம்' என்கிற நாவலும் 1998-இல் 'கனவுலகவாசியின் நனவு குறிப்புகள்' எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. இவை நான்கும் நவீனத்துவ படைப்புகளாகும். 'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்' (1999), 'அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்'(2000), 'சிலந்தி' (2001), 'யுரேகா என்றொரு நகரம்'(2002), '37'(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும் 'பின்நவீனத்துவம் என்றால் என்ன?'(2004) என்கிற நூலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன.