ஓசூரில் பிறந்த விட்ட்ல் ராவ் தொலைபேசித்துறையில் பணியாற்றிக்கொண்டே இலக்கியம் செய்தவர்.ஓவியரும் கூட இவர் எழுதிய பத்து நாவல்களில், "போக்கிடம்", "நதிமூலம்", "மீண்டும் அவளுக்காக", "வண்ண முகங்கள்" போன்றவை குறிப்பிடத்தக்கவை 240 சிறுகதைகள் நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. பல சிறுகதைகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. இலக்கி சிந்தனைக்காக "தி.ஜ.ரவின் எழுத்தும் தேசிய உணர்வும்" என்ற நூலை எழுதியுள்ளார். ஓவியம் பற்றி "ஓவியக்கலை உலகில்..." என்ற நூலையும், திரைப்படங்களைப் பற்றி "சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்" என்ற நூலையும் எழுதியுள்ளார்.