மதுரை மாவட்ட செப்பேட்டுப் புகழ் சின்னமனூரில் 1925 சூன் 10 இல் வேலுச்சாமி - அழகம்மை தம்பதியினருக்கு தலைமகனாய்ப் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை, தில்லி, நாக்பூர், மதுரை முதலிய பல்கலைக் கழகங்களின் மாணவர். நூலகவியல், பொருளாயியல், கல்வியியல் போன்ற துறைகளில் அதிக கவனத்தை செலுத்தியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜேர்மன், பிரெஞ்சு மொழிகள் தெரிந்தவர். மாணவப் பருவத்திலேயே (1936 மே 20) நூலகத் தொடர்பு பெற்றவர். 1949 இல் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்று 1962 இல் பொதுநூலக (கல்வி)த்துறை இயக்க முதல் நூலகர் ஆவார். 1972 இல் கன்னிமார பொது நூலகத்தின் முதல் தொழில் நூலகரும் ஆவார். 1972 இல் தமிழக அரசின் நூலகத்துறையின் முதல் இயக்குநராக இணைந்து 1982 வரை 10 வருடங்கள் தொடர்ச்சியாக இயக்குநராக இருந்து பெருமை சேர்த்தவர். சுதந்திர இந்தியாவில் 10 ஆண்டுகள் ஒரு துறையின் இயக்குநராக தொடர்ந்து இருந்தவர் இவர் ஒருவரே. தேசிய, மாநில பல்கலைக்கழக நூலக குழுக்களில் உறுப்பினர். நூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற இவரது ஆட்சிக்காலம், தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்துள்ளார்கள். இவரை தமிழக நூலக இயக்கத்தின் முன்னோடி என்றும் தந்தை என்றும் அழைக்கலாம். இவர் இந்திய நூலகத்துறை முன்னோடி அரங்கநாதனின் ஏகலைவ மாணவர். ஏறத்தாழ 1000 எழுத்துரைகள் எழுதியவர். இதில் 101 ஆங்கில எழுத்துரைகள். இதில் சில இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளன.வானொலி/ளி நிகழ்வுகளில் பெரும் பங்கு கொண்டுள்ளார். இதில் நூலக இயல் சிறப்பிடம் பெறுகிறது. இந்தியாவின் முன்னோடி முயற்சியாக தமிழில் 1951-1982 இல் இவர் பதிப்பித்த நூற்றொகைகள், குழந்தை நூற்றொகைகள், நூல்கள் அறிமுக விழா மலர்கள் முதலியன தமிழ் நூல்கள் வளம் காட்டுவன.இவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள், நூலக வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வேடுகளாகும். வேதியம் 1008 உட்பட இவர் எழுதிய 25 நூல்கள் இந்திய தர நிருணயத் தரகள் கொண்டவை. இவர் எழுதிய நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை."இந்திய நூலக இயக்கம்" நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. "இந்திய அரசமைப்பு" தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது.