டாக்டர் கே.ஸ்ரீ.ஸ்ரீதர் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு புதியவர் அல்லர். 1987ல் மருத்துவ சேவையை ஆரம்பித்தது முதல் இன்றுவரை தொடர்ந்து தமிழில் வெளிவரும் பல முன்னணி நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதி வருபவர். இவரது தனித்தன்மையே தான் சொல்ல வரும் தகவல் மிக எளிமையாக படிப்பவரின் மனதில் பதித்து விடுவது என்பதுதான். 1991 ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக மாற்று முறை மருத்துவர்கள் மாநாட்டில் ''ஹெர்பல் ஆன்காலஜி அண்ட ஆஸ்துமா'' என்ற தலைப்பில் இவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை உலகின் பல்வேறு இடங்களில் நடத்த மருத்துவ மாநாடுகளில் வாசிக்கப்பட்டு பல நாட்டு மருத்துவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஹெர்பல் ஆன்காலாஜி என்ற பெயரை பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீன ஆராய்ச்சியின் அடிப்படையில் நிரூபித்து வரும் பெருமைக்குரியவர்.