தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் பல்கலைக்கழக ஆசிரியர் என்ற வகையில் அரசறிவியலுக்கோர் அறிமுகம், சமகால அரசியற் கோடபாடுகளும் பகுப்பாய்வும், மோதல் பற்றிய எண்ணக்கருக்களும், அரசியல் வன்முறையும், மோதல் கல்வியும் உலக அரசியலும், இலங்கையின் பொதுத் துறை நிர்வாகம், ஒப்பீட்டரசியல், சர்வதேச அரசியல் பற்றியகோட்பாடுகள் போன்ற கற்கை நெறிகளை பட்டதாரி மாணவர்களுக்குப் போதித்து அத்துறையின் பன்முக அறிவைத் திரட்டிக்கொண்டுள்ளார்.
இவர் கடந்த இருபது ஆண்டுகளாக பல்கலைக்கழக ஆசிரியராக, சமூகவிஞ்ஞானத் துறையின் தலைவராக, நூல்கள் மற்றும் கட்டுரை ஆசிரியராக, க.பொ.த(உ.த) பரீட்சையின் பிரதம பரீட்சகராகப் பணிபுரிந்து பல்வேறு அறிவையும், அனுபவத்தையும் பெற்றவர்.