கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் விரிவுரையாளராக, பேராசிரியராக, துறைத் தலைவராகப் பல நிலைகளில் பணியாற்றியவர். நீண்டகால கற்பித்தல் அனுபவமும் ஆராய்சிசி மரபும் கொண்டவர். ஆசிரியர் கல்வியில் புத்தாக்கமும் பல்பரிமாணமும் சிறக்க உழைத்து வருபவர்.
இவர் விஞ்ஞான கணித அறிவுத் தொகுதியின் விரிவாக்கப் புலங்களை உள்வாங்கி கல்வியியலில் புதுமலர்ச்சி ஏற்பட முயற்சிப்பவர். இவரது நூலாக்கப் பணிகள் கல்வியியல் துறையில் புது ஆய்வு மரபு, ஆக்கமலர்ச்சிப் பண்புகள் புத்தாக்க சிந்தனைகள் ஏற்படக் காரணமாக விளங்குகின்றன. இதற்கு அவரது ஆக்கங்கள் மேலும் வலுச்சேர்க்கின்றன.
சமகாலக் கல்வி வளர்ச்சியில் தரவிருத்தியை உறுதிப்படுத்தும் ஆய்வுக் களங்களை முன்னிறுத்தி இயங்கி வருபவர்.