பேரசிரியர் முனைவர் சமாதிலிங்கம் சதியசீலன் கடந்த 32 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணிபுரிந்து வருகின்றார். இலங்கையில் புரையோடியுள்ள இனவாத அரசியலைப் புரிந்து கொள்வதற்கான அறிவு ஆய்வு சார்ந்த பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்பேசும் மக்களது சுயத்துவத்தின் அடையாள இருப்பிற்கான வரலாற்றுணர்வின் தொடர்ச்சியை கருத்து நிலைத் திரட்சியை நுண்ணியதான ஆய்வு மூலாதாரங்கள் மூலம் கருத்தாடல் செய்கிறார். பாரம்பரிய பெருமித உணர்வைக் கட்டமைக்கிறார்.