நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கே.பொன்னுத்துரை தனது பதினெட்டாவது வயதில் ஈழநாடு பத்திரிகையின் நிருபராக எழுத்துலகில் காலடி பதித்துப் பின்னர் தினபதியில் செய்தியாளராகவும், 94 இற்குப் பின் தினகரன், இ.ஒ.கூ ஆகியவற்றின் செய்தியாளராகவும் பணி புரிந்துள்ளார். சமூக, சமய, இலக்கிய, கல்வி, கலைச் செயற்பாட்டாளரான இவரின் ஆக்கங்கள் கிருஷ்ண மீரா என்ற புனை பெயரிலும் இலங்கையின் முன்னணி பத்திரிகை சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கேபிடி எனவும் இலக்கிய உலகில் அறியப்படுபவர்.
இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் இளைய தலைமுறைப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருபவர்