பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் "கல்வியியல்" துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது "புலமைமரபு" எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.
இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்புமிகு புலமையாளராகவே திகழ்கிறார்.