ஏ.சி.ஜோர்ச் யாழ். கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகப் பணிபுரிகின்றார். இவர் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். அரசியல் பொருளாதாராம் சார் சிந்தனைகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
சமகால அரசியல் பொருளாதார விடயங்களை உடனுக்குடன் இற்றைப்படுத்துபவர். சர்வதேசிய, தேசிய மட்டங்களில் மேலெழுச்சிபெறும் விவகாரங்களிலும் தெளிவான கண்ணோட்டங்களை உருவாக்க முற்படுபவர். இவற்றை சகபாடிகளுடன் கலந்துரையாடல் செய்பவர்.
சமூக மாற்றுச் சிந்தனைகளைப் பலதரப்பட்டவர்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்பதற்காகவும் தீவிரமாகவும் உழைப்பவர். விமர்சன உணர்திறனை விரிவாக்குபவர்.