காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா, ஒரிசாவில் பிறந்தவர், கப்பற் பொறியியலில் தேர்ச்சி பெற்று 10 வருடங்கள் கப்பற் படை கப்பல்களில் பணியாற்றினார். ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற கப்பலின் ஃபிளைட் டெக் சீஃப் ஆக பணியாற்றினார். பிறகு 2 வருடங்கள் வணிக கப்பல்களில் பணியாற்றிய பின்னர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சேர்ந்து அங்கே 1991 இல் தலமை பொறியாளராக ஓய்வு பெற்றார். பின்னர் உலக வங்கியால் ஆலோசகராக அழைக்கப்பட்டு, கம்போடியா புனர் நிர்மாணத்தில் பங்கு கொண்டார். துறைமுகப் பணியின் நடுவில் வங்க தேச விடுதலைப்போரில் கடற்படையால் அழைக்கப்பட்டு, அதில் பங்கேற்றார். சென்னையில் இப்போது வாழும் இவரது சிறு கதைகள் தொடர்ந்து விகடனில் வெளிவருகின்றன. ஆங்கிலத்திலும் எழுதுகிறார்