பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றும் இவர் யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது இடைநிலைக் கல்வியினை யாழ் இந்துக் கல்லூரியில் பெற்ற பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சிறப்பு கலைமாணிப் பட்டத்தினையும், முது தத்துவமானிப் பட்டத்தினையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கோயிற்கலை தொடர்பான பெரும் பட்டயச்சான்றிதழையும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவராவார். கோயிற்கலை, பண்பாடு, கல்வெட்டு, நாட்டாரியல் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பல ஆய்வுத் தொகுதிகளையும் வெளியிட்டவராவார்.