மெளனமாய் உன்முன்னே... என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார்(2003-ல்). பர்த்ருஹரியாரின் தத்துவங்களைச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, நீதி சதகம் என்ற நூலாக வெளிவந்தது (2000-த்தில்). 'பர்த்ருஹரி சுபாஷிதம்' என்று சமஸ்க்ருதத்திலிருந்து முன்னூறு பாடல்களின் தமிழாக்க நூல் செப்டம்பர் 2005-ல் வெளிவந்தது. இவ்வாண்டு மற்றுமொரு மொழிபெயர்ப்பு நூலும்,இரு கவிதைத்தொகுப்பு நூல்களும்,ஒரு நாவலும் வரவிருக்கின்றன. நிலாச்சாரல் மின்னூலாக இவரின் கவிதைகளை வெளியிட உள்ளது. மதுரை வானொலியில் இவரின் ஏழுபாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. கல்கி,அமுதசுரபி,மங்கையர் மலர்,அமீரக ஆண்டு மலர்,படித்துறை மற்றும் சில சிற்றிதழ்களில்(கலை,உங்கள் பாரதி,களம்,நம்பிக்கை...) கவிதை,சிறுகதை,கட்டுரை,நேர்காணல் என பல படைப்புகள் பல இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். இரத்த தானம்,கவுன்சிலிங்,விழியிழந்தோருக்கு வாசித்தல்,சிறுவர்களுக்கு கல்வி என இயங்கி வருகிறார். இராஜபாளையத்தில் 'இராஜபாளையம் தமிழ்நாடுஅரசு பெண்கள்,சிறுவர்நூலகம்' அமைய முக்கிய காரணியாயிருந்தவர்.