கனடாவில் வசிக்கும் தலையாய தமிழறிஞர்களில் ஒருவர் முனைவர் திரு இ.பாலசுந்தரம் அவர்கள். தமிழ்மொழியின் சிறப்பினை எடுத்துக் காட்டும் வல்லவர். இவர் ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். இவர் மொழியியல் ஆய்வை மட்டும் மேற்கொள்ளாது, பொருளமைப்பையும் நன்கு ஆராய்ந்திருக்கிறார் என்கிறார் பேராசிரியர் திரு நா.வானமாமலை. மட்டக்களப்பு நாட்டுப் பாடல்களை ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர். இவரது ஆய்வு நூல் பலராலும் பாராட்டத்தக்க வகையில் புதுப் பொலிவுடன் விளங்குகிறது. உளவியல் துறையில் அறிவும் அனுபவமும் பெற்றவர். கல்கத்தா மக்கள் பண்பாட்டுக் கழக உறுப்பினர், தமிழ் விரிவுரையாளர், யாழ்ப்பாண பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர். வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ்ப் பண்பாட்டில் இருந்து விலகாதவர். தமிழ்மீது ஆறாத காதல் கொண்டவர்.