இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்துக்கொண்ட தலைசிறந்த பத்திரிகை ஆசிரியர். தமிழ்நாடு, காந்தி, தினமணி, நவசக்தி.. என்று பல்வேறு இதழ்களில் ஆசிரியராக இருந்து தனி முத்திரை பதித்த இதழிநில் முன்னோடி. இன்றும் இலக்கியவாதிகளால் நினைவுகூரப்படும் மணிக்கொடி இதழைத் தொடங்கி நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர். லியோ டால்ஸ்டாயின் War and Peace என்ற பிரமாண்டமான நாவலை போரும் அமைதியும் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர். பத்திரிகைத் துறையில் தொடர்ந்து இயங்கி வந்தாலும், சிறுகதை, நாவல், கவிதை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் அவர் கவனம் செலுத்தியிருக்கிறார். எந்தப்பத்திரிக்கையில் பணிபுரிந்தாலும் பத்திரிக்கை சுதந்திரத்தையும், பத்திரிக்கையாளர் சுதந்திரத்தையும் முக்கியமாகக் கருதினார். காட்டு மூலிகை போல் கருத்துலகில் கவனம் பெறாமல் போய்விட்டார்.