படைப்புக்கென்றொரு வித்தியாசமான முகத்தை அணிந்துகொள்ளாதவர் தமிழ்மகன். எல்லாவற்றையுமே புரட்டிப்போட முனையும் 'கலகக்காரப்' பாவனையேதும் அவரிடம் கிடையாது. இன்றைய வாழ்க்கையின் புதிர்களையும் அபத்தங்களையும், அவற்றை எதிர்கொள்ளும் மனிதர்களையும் ஒரு பார்வையாளனாக விலகி நிற்காமல் ஒரு பங்கேற்பாளனாக தன்னையும் உள்ளடக்கி நகைச்சுவை கலந்த கிண்டலுடன் விமர்சனம் செய்கிறவர். இன்றைய அரசியல், ஊடகங்கள், திரைப்படங்கள், சமூக மதிப்பீடுகள் அனைத்தின்மீதும் தமிழ் மகனுக்கு விமர்சனங்கள் உண்டு. -ராஜமார்த்தாண்டன்.