யாழ். கட்டப்பிராயில் பிறந்த கலாநிதி ஆ.க.மனோகரன் 1971 - 1973 ஆண்டுகளில் இலங்கை விவசாய இலாகாவில் பணியாற்றியவர். உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும், யாழ்.செங்குந்தா இந்துக் கல்லூரியிலும் தனது கல்வியைப் பெற்று விவசாயத்துறையின் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். இலங்கை அரசியிலில் ஈடுபாடு கொண்ட இவர். 1975 இலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும், இலங்கையிலும் தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளுக்கான அரசியல் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். சில ஐரோப்பியப் பத்திரிகைகளில் பீழவிடுதலைப் போராட்டம் தொடர்பான கட்டுரைகளை புனைபெயர்களில் எழுதியுள்ள இவர். தனது சமூகவிஞ்ஞான இளமானிப் பட்டத்தை Univesity of North London இலும் முதுமானிப் பட்டத்தை London South Bank University இலும் நிறைவு செய்து அதே சர்வகலாசாலையில் அரசியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றார். இப்பொழுது தெற்காசிய நாடுகளின் இன முரண்பாடுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.