மன்னார் மாவட்டம் பேசாலைக் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். நாடகத்துறை மூலம் கலைவானிற் பிரகாசிக்கத் தொடங்கியவர், இன்று கட்டுரை, கவிதை நாடகம், சிறுகதை என்ற வரிசையில் நாவல் இலக்கியத்திலும் தடம் பதித்துள்ளார். நவீன உத்திகளுடன் கூடிய நாற்பதுக்கும் மேற்பட்ட குறியீட்டு நாடகக் கூத்துக்கள், சிறுவர் நாடகங்கள், வானொலி நாடகங்கள் என பல்வேறு வகை நாடகங்களையும் படைத்து, தானே நெறியாள்கை செய்து சிறப்பாக அரங்கேற்றியுள்ளார். சிறந்த நாடக நெறியாள்கைக்கான தேசிய மட்டத்திலான ஆனந்த கீர்த்திகா விருதினைப் பெற்றுள்ளார்.