நிர்க்கதியாகிவிடும் சில புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவிக்காகவே இன்டர்நேஷனல் ரெஃபியுஜிஸ் ஆர்கைசேஷன் என்ற நிறுவனத்தை இலண்டனில் நிறுவி பல வகைகளிலும் உதவிகளைச் செய்து வருகிறார். 1966 ஆம் ஆண்டு இலங்கை இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்த இவர், இலங்கை இலக்கியப் பேரவை அமைத்து அதன் தலைவராக விளங்கினார். "விகடன்" என்ற சஞ்சிகையையும்"செய்தி முரசு" என்ற வாரப்பத்திரிகையையும் வெற்றிகரமாக நடத்தியவர். லண்டனில் இவர் சிறப்பாக நடத்திவரும் "தமிழினி" மாத இதழ் பிரபல்யம் வாய்ந்தது.