கிழக்கிலங்கை திருப்பழுகாமம் எனும் ஊரைச்சேர்ந்தவர். கவிதைகளே இவரது தொடக்ககாலப் படைப்புகளாக இருந்தன. பின்னர் தொடர்ந்து சிறுகதைகளையும் எழுதி வருகிறார். சந்த நயம் மிக்க மரபுக் கவிதைகளை அவ்வப்போது எழுதி வெளியிட்டு வருகிறார். பாரதிதாசன் மரபை முன்னெடுக்கும் கவிதைகள் இவை. மட்டங்ஙகளப்பு மண்ணில் பல்வேறு சீர்திருத்த அமைப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வந்த இவர், அதன் வெளிப்பாடாகவே கவிதைகளைப் படைத்துள்ளார். சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் செயற்பட்ட திராவிட இயக்கதின் செல்வாக்கு மட்டக்களப்புப் பகுதியிலும் ஏற்பட்டுள்ளது. அவ்வகைச் செல்வாக்கின் சிறந்த எடுத்துக்காட்டாகப் ஆ.மு.சி.வேலழகன் திகழ்கிறார். பண்டைத் தமிழ் இலக்கியம், தொல்காப்பியம், சிலப்பதிகாம், திருக்குறள் ஆகியவற்றில் ஈடுபாடு மிக்க இவர், திருக்குறள் அமைப்புக்கள் பலவற்றை உருவாக்கியதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். திராவிட இயக்கப் ஆரம்பரியத்தில் வந்த இவரது படைப்புகளின் அடித்தளம், சமூக சீர்திருத்தங்களை வெளிப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன.