பரமக்குடி அருகில் உள்ள பகைவென்றி என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். சேவிகன்-அண்ணாமலைக் கல்லூரியிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் தனது கல்வியைப் பெற்றுள்ளார். அஞ்சல் வழியில் கல்வியியல் பட்டம் பெற்றுள்ளார். படித்த கல்லூரியில் இரண்டாண்டு ஆசிரியப்பணி, பின்னர் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் உதவி பெற்று ஆராய்ச்சிப்படிப்பினை மேற்கொண்டுள்ளார். தற்பொழுது கல்பாக்கம் அணுசக்தி மத்திய க்ல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். கல்பாக்கம் தமிழ்க் கலை அறிவியல் மன்றம், பாவலரேறு தாய்த்தமிழ்ப்பள்ளி ஆகியற்றுடன் நெருங்கிப் பணியாற்றுபவர்.