கொழும்பைச் சேர்ந்த 69 வயது இளைஞர். ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமை மிக்க அனுபவ எழுத்தாளர். அரை நூற்றாண்டுகாலம் எழுத்துப் பணியில் ஈடுபட்டு வரும் இவர் இதுவரையில் 15 இற்கு மேற்பட்ட நூல்களை தமிழில் எழுதியுள்ளார். இரண்டு ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். அமெரிக்காவில் பெரும்பாலும் வாழ்ந்தாலும், ஈழத்தமிழ் இலக்கியத்தோடு இரண்டறக் கலந்தவர். திறனாய்விக் கட்டுரைகள் எழுதுவதில் இவர் வல்லவர். திறனாய்வு என்றால் என்ன? என்ற இவரது புத்தகம் மிகவும் பேசப்படக்கூடியது. அமைதியான குணம் படைத்த இவர் தொடாத துறைகளே இல்லை. தமிழக எழுத்தாளர் சுஜாதாவைப் போல் பல்துறை அறிஞர், இவரது சொல்லாற்றல் அபரிமிதமானது. இவர் ஒரு சிறந்த திரைப்பட விமர்சகர்.