இவர், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறையில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றவர். இலக்கணம், அழகியல், நவீன இலக்கியம், நாட்டுப்புறவியல், மக்கள் தொடர்புச் சாதனங்கள் ஆகிய துறைகளில் ஈடுபாடு உடையவர். கணிப்பொறியியலில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், தமிழை மின்னணுச் சாதனத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.