கல்வியறிவற்ற எளிய குடும்பத்தில் பிறந்து தம் உழைப்பால் உயர்ந்தவர். பூண்டி அ.வீரய்யா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரித் தமிழ்த்துறையில் முப்பத்துமூன்று ஆண்டுகள் தமிழ்ப்பணி புரிந்தவர். பத்துக்கும் மேற்பட்ட ஆய்வியல் அறிஞர்களை உருவாக்கியவர். "மறையருவி", "தமிழ்ப்பொழில்" போன்ற இதழ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். இவரின் ஆய்வுப் பணியைப் பாராட்டி "உலகக் கிறிஸ்துவத் தமிழ்ப் பேரவை" அருட்கலைஞர் என்ற பட்டம் தந்து சிறப்பித்தது.