நாகை மாவட்டம் சீர்காழி எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றபின் முழுநேர தொழில்முறை நாடக நடிகப் பயிற்சிக்கூடமான கூத்துப்பட்டறையில் 12 ஆண்டுகள் நடிகர்களைப் பயிற்றுவிப்பவர். நாடக ஒத்திகைகளுக்கு இயக்குநர் என்ற நிலைகளில் தன்னை வளர்த்துக்கொண்டவர். தான் பயிற்சிபெறும் காலத்தில் கேரளா, கல்கத்தா, மணிப்பூர், ஜம்மு, பெங்களூர், மும்பை போன்ற இடங்களுக்குச் சென்று சக நடிகர்களுடன் பயிற்சிப் பட்டறை நடத்தியுள்ளார். போர்க்கலைப் பயிற்சியில் ஆர்வம் மிக்க இவர், கேரளாவின் களரிப்பயத்து, மணிப்பூரின் தாங்-தா, தமிழகத்தின் சிலம்பம் மற்றும் சீனாவின் தைய்-சி-சூவான் போன்றவற்றில் பரீட்சயமிக்கவர். நாடகம் என்று மட்டுமில்லாமல் அரங்கக் கலையில் ஈடுபடும் நடிகனுக்கென்று பிரத்யோகப் பயிற்சிகளை, எவ்வாறு ஆராய்ந்து பயன்படுத்துவது மற்றும் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு எப்படிப் பயன்பாட்டு வழியில் கொண்டு செல்வது என்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்.