புதுவை அரசு தாகூர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறையில் பணியாற்றுபவர். பாரதியின் படைப்புகளில் மனம் தோய்ந்து;அவற்றை முறையாக ஆய்ந்தவர். பயனுள்ள பழமை, பண்புள்ள புதுமை இரண்டையும் போற்றுபவர். பழமையும் புதுமையும் காலத்திற்கேற்பக் கவினுற வேண்டும் என்று கருதுபவர். தமிழ்ப் பரப்பில் முகிழ்ந்த சித்தாந்த சைவச் செந்நெறியைப் போற்றிப் பரப்புபவர்.இளைய தலைமுறையின் ஏற்றமிகு எதிர்காலத்தை எண்ணத்தில் கொண்டு செயலாற்றுபவர்.