சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இளங்கலை பட்டத்தை மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், கல்வியியல் இளையர் பட்டத்தை புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியிலும், மதுரைத் தியாகராயர் தன்னாட்சிக் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும், திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டத்தையும் பெற்று தற்பொழுது கேரளப் பல்கலைக்கழகத்தில் முழு நேர ஆய்வாளராக ஆய்வில் ஈடுபட்டு வருகிறார், காந்தீயச் சிந்தனையில் பட்டயமும் உயர்தரக் கணினிப் பயிற்சியில் சான்றிதழும் பெற்றவர். சுவடியியல் மற்றும் இணையம் சார்ந்த பல்வேறு பணிமனைகளிலும் பங்குகெடுத்துள்ளார். மாதில, தேசி ஆராய்ச்சிக் கருத்தரங்கங்களில் கல்ந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.