இவர் திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கியம் முதுகலை பயின்று பதக்கம் பெற்றவர். பின்னர் அங்கு முன் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு அதிலும் தங்கப் பதக்கத்தினைப் பெற்றார். மாணவப் பருவத்திலேயே "சொற்கோ" என்ற புனைபெயரில் கவிதைகளையும் கட்டுரரகளையும் எழுதி வந்தார். தமிழய்யா கல்விக் கழகம் திருவையாறில் நடத்திய கட்டுரைப்போட்டியில் பங்கு பெற்று "செந்தமிழ்த் திலகம்" என்ற உயரிய விருதினைப் பெற்றவர். இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பதினான்கு ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார்.