தெள்ளாறு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். நந்தனம் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, பகுதி நேரம் வேலையில் இருந்துகொண்டே பச்சையப்பன் கல்லரியில் முதுகலைத் தமிழ்ப் படிப்பில் சேர்ந்தார். அங்கு ஆய்வியல் அறிஞர் பட்டமும், தொடர்ந்து முனைவர் பட்டமும் பெற்றார். சிறுதுகாலம் பச்சையப்பன் கல்லூரியிலேயே பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவத்துடன் தனது சொந்த ஊரான தெள்ளாற்றில் தொடங்கப்பட்ட இராஜா நந்திவர்மன் கல்லூரியில் முதல்வராஊப் பொறுப்பேற்று முன்நின்று திறம்பட நற்செய்ல்கள் பல புரிந்தார். தற்பொழுது கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.