கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர். தமிழ் இளங்கலையும், முதுகலையும் விருத்தாசலம் அரசுக்கல்லூரியில் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில் பட்ட ஆய்வை முடித்துள்ளார். தற்பொழுது தமிழில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். சென்னை குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். திறனாய்வு எழுதுவதில் ஆர்வமுடையவர். பல கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு கட்டுரைகள் வழங்கி வருகிறார் .