திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தனது தொடக்கக் கல்வியை கீழரஞ்சூரிலும், உயர்நிலைக் கல்வியை வடுகர்பேட்டையிலும் முடித்து, தாவரவியியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெறெறுள்ளார். பின்னர் திருவையாறு அரசர் க்லலூரியில் தமிழ் முதுகலைப் பட்டமும், திருச்சி பிசப் ஈபர் கல்லூரியில் எம்.ஃபில் பட்டமும், தேசியக்கல்லூரி உயராய்வு மையத்தில் முனைவர ஃபட்டமும் பெற்றுள்ளார். தற்போது நாகபட்டினம் அ.து.ம மகளிர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து 25 இற்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். இவரது பல ஆய்வுக் கட்டுரைகள் மலர்களிலும் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன.