காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றும் இவர் தேனி மாவட்டத்தில் அம்மாபட்டி எனும் சிற்றூரில் பிறந்தவர். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் பி.லிட் பட்டம் பயின்றவர். இலக்கணf பாடத்தில் முதல்மதிப்பண் பெற்று தங்கப்பதக்கம் வென்றவர். இவர் தனது முதுகலை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட படிப்புகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த் துறையில் அமைந்தது. முதுகலையில் பல்கலைக்கழக முதல் தரமும் தங்கப்பதக்கமும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் பல்கலைக்கழக முதல் முதல் தரமும் பெற்றவர். இவர் முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த ஆய்வுக் கட்டுரைக்காக எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் முதல் பரிசு பெற்றவர்.