இவர் சென்னை இராணி மேரிக் கல்லூரியில் தனது இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளை மேற்கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வினை 1993 இல் முடித்து Ph.D பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி விரிவுரையாளராக கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். குருவானவரான தனது கணவருடன் சேர்ந்து கிறிஸ்தவ திருப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.