கடலூர் மாவட்டம் திருமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். மயிலாடுதுறை ஸ்ரீமத் சிஞான பாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரியில் இளங்கலை படிப்பையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இராணி மேரிக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்த பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். தற்பொழுது திண்டிவனம் திரு.ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணி புரிகிறார். சென்னைப் பல்கலைக்கழகம் இவரது "உரிச்சொல் நிகண்டு ; அகராதியும் மூலமும்" என்ற நூலை வெளியிட்டுள்ளது. பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து வருகிறார்.