சு.கிறிஸ்டோபர் ஜெயகரன் - 1946 இல் தாரபுரத்தில் பிறந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிலவியலில் முதுகலைப் பட்டமும், இங்கிலாந்து லஃப்ரோ பல்கலைக்கழகத்தில் நிலத்தடி நீர் - கிராமக் குடிநீர் மேம்பாடு சான்றிதழும் பெற்றவர். 1971-1977 ஆஃப்ரோ எனும் அரசுசாரா நிறுவனத்தில் தமிழக நிலத்தடி நீராய்வுக் குழுவின் தலைவர். 1978-82 தன்சானிய அரசின் , மோநோ கோரோ மாநிலத்தின் நிலத்தடி நீர்வளப் பொறுப்பாளர். 1982-83 ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றில் ஆய்வாளர். 1983-87 காமன்வெல்த் நிறுவனத்திற்காக மேற்கு ஆபிரிக்க நாடான சியராலியோனில் நிலத்தடி நீர் ஆலோசகர். 1989-2005 ஜம்மானிய நிறுவனம் ஒன்றிற்காக மேற்கு மற்றும் தெற்கு ஆபிரிக்க நாடுகளில் ஆலோசகர் பணி எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2005 இலிருந்து இன்றுவரை ஜெர்மனிய ஆய்வு ஆலோசனைக் குழுவில் நிலத்தடி நீராய்வு சம்பியர் என்று ஆபிரிக்க நாட்டில் அழைக்கப்படுபவர். மூமாமையரைத் தேடி (1991, கிரியா), குமரி நில நீட்சி(2003, காலச்சுவடு), தளும்பல் (2004, உயிர்மை) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. மனைவி ஃப்ளாஸி உடற் கூற்றியல் பேராசிரியை, மகன் மகள்(இரட்டையர்) ஆனந் - அமெரிக்காவில் நீர்வளத்துறை விரிவுரையாளர். கவிதா - தென் ஆப்பிரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன். உலகம் சுற்றினாலும் வீடு ஒன்று உள்ளது பெங்களூரில்.