சுப்ரபாரதிமணியன் திருப்பூர் வாசி. தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றவர். சிறுகதை, நாவல், பயணக்கட்டுரை, பத்திரிகை என்று தன்னை விரித்து வருபவர். நவீன வாழ்க்கையின் பிரச்சனைகளையும், சிதைவுகளையும் பற்றிய நுட்பமான பார்வை இவருக்கு உண்டு. அது இவரது எழுத்துக்களில் விரவி இருக்கும்.