இந்த நாவல் உண்மையான நிகழ்வுகளைக்கொண்டு புனையப்பட்டது. ஆகவே அதன் நம்பகத் தன்மை உறிதியாக உள்ளது. பாரத்திரங்கள் உயிருடனும் உணர்வுகளுடனும் அமைந்துள்ளன. பாத்திரங்களுக்கான இடப் பின்னணியும் அருமையாக அமைந்துள்ளது. கற்பனையால்கூட வடிக்கமுடியாத அவல வாழ்க்கை உண்மை நிகழ்வுகளிலிருந்து பிறந்துள்ளது. மலேசியாவில் தமிர்களின் ஒரு பகுதி வாழ்வு அவலமானதுதான். இந்த அவலத்துக்குப் பல காரணங்களை நாம் சொல்லலாம். காலனித்துவம் அவர்களை அவர்களை வெறும் கூலிகளாகவே வைத்திருந்தது ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த மக்களின் அறியாமையும் முயலாமையும் இணைந்து இந்த அடிமை நிலையிலிருந்து விலகி உயரவிடாமல் மனத்தால் முடிக்கிக் கட்டிப் போட்டிருந்தமையும் ஒரு காரணமாகும்.