தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ந.பிச்சைமூர்த்தி கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
மணிகண்டன், யv.y.manikandan@gmail.com
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 150.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 208
ISBN : 9789381343302
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
எடை : 000 g
புத்தக அறிமுகம் :
வசனகவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி. மணிக்கொடி இதழின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர் - என மறுமலர்ச்சித் தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்பவர் ந.பிச்சைமூர்த்தி. 
 
அவருடைய சிறுகதைப் படைப்புலகத்தையும், கவிதையுலகத்தையும் ஏற்கனவே அறிந்துள்ள தமிழிலக்கிய உலகம் இத்தொகுதியால் அவருடைய கட்டுரை உலகத்தை முதன்முறையாகக் காணுறும் வாய்ப்பைப் பெறுகின்றது.
 
இதுவரை விரிவாக அறியப்படாத ந.பிச்சைமூர்த்தியின் இன்னொரு பரிமாணத்தை இந்நூல் தமிழுலகின் கவனத்திற்கு உரித்தாக்குகின்றது.
 
காலங்களைத் தாண்டிய நிலைபேறு கொண்டதாக அவரது கட்டுரை உலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ந.பிச்சைமூர்த்தியின் பரந்து விரிந்த இலக்கியப் பயிற்சியையும், பார்வைகளையும், இலக்கியக் கோட்பாடுகளையும், ம்பகால மறுமலர்ச்சி இலக்கிய வரலாற்றையும் இத்தொகுதியின் கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan