இப்புதினத்தின் நாயகன் களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல், கடம்ப மன்னனைப் பொருது வெற்றிவாகைச் சூடி, அக்களிப்பில் இருந்த வேளையில் கொலையுண்டதாகக் கிடைத்த நூலிழைச் செய்தியை வைத்துக்கொண்டு மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுப் புதினத்தை நெய்துவிட்டார். அதில் ஆங்காங்கே சாண்டில்யன் பரம்பரையில் தானும் ஒருவர் என்று நிரூபணம் செய்யும் வகையில் வரலாற்றுப் புதினங்களுக்கே உரித்தான வர்ணனைகளை ஜரிகை இழைகளாகப் பின்னியிருக்கிறார்.