டத்தோ வீ. நடராஜன் மலாயாப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை ( ஹானர்ஸ் ) பட்டமும், கல்வித் துறையில் பட்டயமும் பெற்றவர். வரலாற்றைச் சிறப்புப் பாடமாகக் கற்றவர். 10 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றியவர். அதன் பின் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும், லண்டனின் லிங்கன்ஸ் இன்னில் பார்-அட்-லாவும் பெற்றவர். இப்போது வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். பூஜாங் பள்ள்த்தாக்கின் மையமான கெடா சுங்கைப் பட்டாணியில் பிறந்து வளர்ந்தவர். பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு என்பது இவருடைய வாழ்நாள் வேட்கையாகும். அந்த ஆய்வின் முடிவே இந்தப் புத்தகம். இது பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு, அகழ்வாய்வியல் மற்றும் அங்குள்ள பழம்பொருள்கள் பற்றிய பரவலான பார்வை. மலேசியாவின் தேசியப் பாரம்பரியச் சொத்தான புராதன கெடாவின் கதையை இந்த நூல் விவரிக்கிறது.