புதுமைதாசன் சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாம் பணியாற்றிய காலத்தில் சிங்கப்பூரின் கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சமூகத்தைப் பிரதிபலிப்பனவாகவும், நகைச்சுவை விருந்தாகவும், சங்க இலக்கியங்களின் பிழிவாகவும் , பிறமொழி இலக்கியங்களின் தழுவலாகவும், இன்னும் பல்வேறு கோணங்களிலும் தமது இலக்கியங்களை வெளிக்கொணர்ந்தவர்.
அவர் படைத்த சுமார் ஐம்பதற்கும் மேற்பட்ட படைப்புகளை அடிப்படையாகக்கொண்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், இலக்கிய கலைஞர்கள் முதலானோர் படைத்த 22 ஆய்வுக் கட்டுரைகள், மூன்று கவிஞர்கள் இயற்றிய கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.