தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விமர்சன முகம் - 2
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
கார்த்திகேசு, ரெkarthigesur@gmail.com
பதிப்பகம் : உமா பதிப்பகம்
Telephone : 60340411617
விலை : 25.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 240
ISBN : 9789679109412
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

முன்னுரை

தமிழ்ப் புத்திலக்கியத்தைத் தொடர்ந்து கவனிப்பதும் வாசிப்பதும் என் வாழ்க்கையில் தொடக்க காலத்திலிருந்தே ஓர் அம்சமாகிவிட்டது. மரபு இலக்கியங்களையும் நான் தொடர்ந்து படித்தே வருகிறேன். தமிழ்த் தொடக்கப் பள்ளியிலேயே என் ஆசிரியர் நீதி நூல்களுக்குப் பின் சிலப்பதிகாரத்தின் சில பகுதிகளையும் எனக்குப் பாடமாகச் சொல்லி பாடம் பண்ணவும் வைத்தார். பின்னர் சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் சொந்தமாக அங்குமிங்குமாகத்  தொட்டுப் படித்த பின் பல்கலைக் கழகத்தில் அவற்றில் பலவற்றை முறையாகப் பாடமாகவும் படித்தேன். இனிக்க இனிக்க அவற்றைப் பயிற்றுவித்த புலவர் ப. அருணாசலம் இன்று இல்லையாயினும், அவர் சொல்லி வைத்த பாடங்கள் கல் மேல் எழுத்தாக உள்ளன.

ஆனால் நவீன இலக்கியமே பின்னாளில் என்னை முற்றிலுமாகப் பற்றிக் கொண்டது. இதற்கொரு முக்கிய காரணம் நவீன இலக்கியம்தான்  நாம் வாழும்  உலகை நமக்குச் சொல்லி உணர்த்துவதாக இருக்கிறது என நான் நினைப்பதுதான். மரபு இலக்கியங்கள் பல அன்றைய வாழ்வைப் பேசுவன. சில என்றைக்கும் இருக்கவேண்டிய விழுமியங்களையும் பேசியுள்ளன. ஆனால் இன்றைக்கு நாம் வாழுகின்ற வாழ்வின் நயங்களையும் சிக்கல்களையும் நம் மனதுக்குள் விவாதிக்க வைப்பன நவீன இலக்கியங்களே.

என் மனதுக்குள் நான் நிகழ்த்தும் இந்த விவாதங்களைத்தான் இந்த நூலில் நான் கட்டுரைகளாக வைத்துள்ளேன்.

ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுமே இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அல்ல. பெரும்பாலானவை நவீன இலக்கியத்தோடு தொடர்புடையவை. ஆனால் சில கட்டுரைகள் ஆளுமைகள், மொழி, சமுகம், வரலாறு சார்ந்தவை. 

எனது விமர்சனங்கள் குறை கூறும் முயற்சிகள் அன்று. அவை பெரும்பாலும் படைப்புக்களை விளக்குவனதான். ஓரிரு இடங்களில் தவிர்க்க முடியாமல் நான் குறை கூறியிருந்தாலும் அது அந்தப் படைப்பின் நோக்கத்தை முழுமைப்படுத்துவதற்காகத்தான் நிகழ்ந்திருக்கும்.

இனி என் விமர்சனத்தை நீங்களும் விமர்சிக்கலாம். 

அன்புடன்

ரெ.கார்த்திகேசு.


உள்ளடக்கம்:

கட்டுரைகள்:
  • மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும்
  • மலேசியாவில் சீனர்கள் குடியேறிச் சமுதாயமா?
  • ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு
  • மலேசியாவில் யோகாவுக்குத் தடை
  • மெல்லக் கணினித் தமிழ் வெல்லும்
  • பழங்கலத்தில் பழங்கள் (10 கட்டுரைகள்)
விமர்சனம்:
  • இரா. முருகனின் “மூன்று விரல்”.
  • சை. பீர்முகமதுவின் "திசைகள் நோக்கிய பயணங்கள்".
  • கழனியூரனின் “வாய்மொழியில் உலவும் வரலாறுகள்”.
  • அ.ரெங்கசாமியின் "லங்காட் நதிக்கரை" 
  • சீ.முத்துசாமியின் "மண்புழுக்கள்" 
  • காஞ்சனா தாமோதரனின் "மரகதத் தீவு":
  • திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்”
  • இளஞ்செல்வன் நாவல்கள்
  • நா.கோவிந்தசாமியின் “தேடி” நாவல்.
  • ப. சிங்காரத்தின் “பினாங்குத் தென்றல்”
முன்னுரைகள்:
  • "வாழ்வே தவம்": சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி
  • ஜெயந்தி சங்கரின் “நாலே கால் டாலர்”
  • பெ.ராஜேந்திரனின் “கரையை நோக்கி அலைகள்”
  • சாரதா கண்ணனின் கதைகள்
  • ஷங்கரநாராயணனின் “நீர்வலை”
  • வெ.தேவராஜுலுவின் “நீரூற்றைத் தேடி”
  • பொன் சுந்தரராசுவின் “துமாசிக் சிறுகதைகள்”
மனிதர்கள்:
  • பாலாவை இழந்த கணங்களில்...
  • “ஒரு சொல் கேளீர்” – துன் சம்பந்தன்.
  • மலேசியத் தமிழ் எழுத்தியக்கங்களின் முன்னோடி சி.வேலுசாமி
கடிதங்கள்:
  • போன ஐம்பதும் வருகிற ஐம்பதும்: மாலனின் திசைகள்
  • “புதிய வலைக்குள் புகுவோம்" : மக்கள் ஓசை
  • ராஜபார்வை: மக்கள் ஓசை
  • “அத்தரும் புகைவாசமும்” : மக்கள் ஓசை
  • "எதிர்காலத்தில் தமிழ் அழியுமா? : மக்கள் ஓசை
  • அன்புள்ள சீனி: தமிழ் நேசன்
  • தமிழவன் 1
  • தமிழவனுக்கு பதில் 1: மலேசிய இலக்கியங்களின் சுய அடையாளம் 
  • தமிழவன் 2 
  • தமிழவனுக்கு பதில் 2: உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
  • உதய சங்கரின் ஆங்கிலக் கட்டுரையும் கார்த்திகேசுவின் பதிலும்.
 
நேர்காணல்கள்:
  • “மின்தமிழ்” மடலாடல் குழுவில் கேள்வி-பதில்
  • "சூதாட்டம் ஆடும் காலம்" நாவல் பற்றி: மக்கள் ஓசை
  • கலைமகள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan