எழு பெரு வள்ளல்களில் ஒருவனும் ஔவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாற்றைக் கதையாகக்கூறும் நூல். சங்க நூற் பாடல்களைக்கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதப்பட்டதே இந்தப் புத்தகம். புறநானூறு, பதிற்றுப் பத்து, அகநானுறு, தகடூர் யாத்திரைப் பாடல்கள், கொங்கு மண்டல சதகப் பாடல்கள் மற்றும் தருமபுரிப் பக்கத்தில் வழங்கப்படும் கர்ண பரம்பரைக் கதைகளும் இவ் வரலாற்று நாவலை எழுத உதவின.