மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் மதத்தைப் பற்றிய கருத்துகள் இந்நூலில் தொகுத்து விவரிக்கப்படுபட்டுள்ளது.
இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் மதத்தின் தோற்றத்தையும், அதன் மறைவையும், அவ்வாறு மறையும் வரையில் மதத்தின் மீதான மார்க்சிய அணுகுமுறையையும் இந்நூல் விவரிக்கிறது.
“அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலின் முன்னுரையில், மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை, கண்டுபிடித்தது முதல் தமது ஆராய்ச்சிகளுக்கு அதையே வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தியிருகிறார்.
சமூகம் வர்க்கமாக உருவானது முதல், சமூகத்தில் காணும் கருத்துகள் ஒரு வர்க்கத்துக்கு சார்பாகவும், மற்றொரு வர்க்கத்துக்கு பாதகமாகவும் காணப்படுகிறது. சமூகத்தில் வர்க்கங்கள் நிலவும் வரையில் மார்க்ஸ் காட்டிய வழிகாட்டுதல் நமக்கு பயன்படும்.
மாறும் சூழலுக்கு ஏற்ப போர்தந்திரம் மாற்றம் பெறும். அந்த மாற்றத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் தான் கம்யூனிட் கட்சி அமைத்துக்கொள்ளும்.
மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் மாறி, மக்களுக்கு அபினியாக எப்படி செயல்படுகிறது என்பதை மார்க்ஸ் விளக்கியிருக்கிறார். இந்தக் கூற்றை மிகவும் கொச்சப்படுத்தி, மார்க்சின் கருத்துக்கு விரோதமாக பலர் விளக்கமளித்து வருகின்றனர். இதனை விமர்சித்து, ஆன்மீக ஒடுக்குமுறையான மதத்தை எப்படி மக்களின் அபின் என்று மார்க்ஸ் கூறியதையும் மேலும் லெனின் கொடுக்கும் விளக்கத்தோடு தொகுக்கப்பட்டுள்ளது.