வாழ்வில் நாம் எதிரகொள்ளும் துரோகங்கள், குரூரங்கள், மோசடிகள், குற்ற நடவடிக்கைகள், ரத்த தோய்தல்கள் என்று எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒளிந்திருக்கும் சின்ன நம்பிக்கைதான் நகைச்சுவை. இந்த நகைச்சுவை உணர்வே நம்மை அடுத்த நாளை நோக்கி நகர்த்துகிறது. இங்கு வாழும் எல்லா மனிதர்களிடமும் வாஞ்சையாக சிவக்குமாரின் கதைத்தொகுப்போடு கைகுலுக்கி உரையாடமுடிகிறது.