இலங்கையில் உள்ள தொண்டமானாறு ஊரில் பிறந்த முருகுப்பிள்ளை நவரத்தினசாமி அவர்கள் வல்வெட்டித்துறையில் உள்ள ரேகு துறைமுகத்தில் இருந்து பாக்கு நீரிணையை கடந்து தமிழகத்திலுள்ள கோடியக் கரைக்கு முதன் முதலாக 1954 பங்குனி 25 நாள் கடந்து சாதனை படைத்தார். இவ்வாறு நீந்திக் கடக்கப்பட்டதூரம் 31.5 மைல்களாகும். இந்த சாதனையைச் செய்த நீச்சல் வீரரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக கூறும் நூல். 1954 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதற் பதிப்பின் இரண்டாம் பதிப்பாகும்.