தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மலையகத் தமிழ்ச் சஞ்சிகைகள் ஓர் ஆய்வு
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சர்மிளாதேவி, இரா
பதிப்பகம் : புரவலர் புத்தகப் பூங்கா
Telephone : 94774161616
விலை : 150.00
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 96
ISBN : 978955095046
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு மலையக இலக்கியம் புது ரத்தம் பாச்சியது என்று பேராசான் க.கைலாபதி குறிப்பிடுவார். தமிழகத்தில் வெளிவந்த மணிக்கொடியைப் போல இலங்கையின் வடபுலத்தில் வெளிவந்த மறுமலர்ச்சியைப் போல, மலையகத்தில் வெளிவந்த மாலைமுரசு இன்றும் பேசப்படுகிறது இன்றைய காலகட்டத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக இவைகள் ஆற்றிய பணிகள் பற்றி பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலைய இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள சிறு சஞ்சிகைகளின் பணிகளைப் பற்றிய அவ்வப்போது இதழ்களிலும் ஓரிரு கட்டுரைகள் வெளிவந்தாலும் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தது குறைவாகவே உள்ளது. இக்குறையை இந்த ஆய்வு நூல் நிறைவு செய்கின்றது. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan