இக்கட்டுரைத் தொகுதியில் வரலாறு, இலக்கிய வரலாறு, உயர் பண்பாட்டிற் பேசப்பெறும் கலைக்கூறுகள், ஈழத்து இலக்கிய வளர்ச்சி (அதில் முக்கிய இடம்பெறுவோர்), ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காறுகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெறுகின்றன. இந்த நூலின் பலமும், இதன் அசாதாரணத் தன்மையும் இது பண்பாட்டின் உயர்நிலைக் கூறுகளையும் அடிநிலைக் கூறுகளையும் ஒரே நேரத்தில் ஒரே ஆய்வுமையத்துள் வைத்துக்கூறும் திறனாகும். யாழ்ப்பாணத்தின் பண்பாடு என்று பேசும்பொழுது ஆறுமுகநாவலரையும், சி.வை. தாமோதரம்பிள்ளையையும் எத்தகைய பெருமித உணர்வுடன் குறிப்பிடுகின்றாரோ அத்தகைய பெருமித உணர்வுடன் அடுப்பு நாச்சி வழிபாட்டையும், கொத்தி வழிபாட்டையும் குறிப்பிடுவார். ஆகம வணக்க முறைகள் பற்றிப் பேசும் அதேவேளையில் நாட்டார் நிலை வழிபாடுகள் பற்றியும் விரிவாகப் பேசுவார். சைவப்பாரம்பரியத்தின் உயர்ச்சியை எடுத்துக் கூறும் அதேவேளையில் கிறித்தவத்தின் வழியாக வந்த இலக்கிய, சிந்தனை ஊடாட்டங்களையும் மிக நிதானமாகப் பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, வழக்காறுகளைப் பற்றிப் பேசும்பொழுது, மட்டக்களப்பு வரலாறு வழக்காறுகளுடன் ஒப்பு நோக்கியும், வன்னி நடைமுறைகள் பற்றி விபரித்தும் செல்கின்ற ஒரு பண்பினை அவதானிக்கலாம்.
உள்ளடக்கம்
-
பதிப்புரை
-
மீள்பதிப்பின் பதிப்புரை
-
மீள் பதிப்பிற்கான முன்னுரை
-
இலங்கையில் சிற்பக்கலை
-
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர்
-
நாகர் கோயில்
-
யாழோசை
-
ஈழத்துத் தமிழர் கிராமியத் தெய்வ வழிபாடு
-
தாமோதரம்பிள்ளை
-
ஈழநாட்டில் தமிழ் வளர்ச்சி
-
நாட்டுக் கூத்து
-
வடபகுதித் துறைமுகங்கள்
-
ஈழத்து ஊர்ப்பெயர்கள்
-
விஞ்ஞானமும் அகராதியும்
-
வன்னிநாட்டை அரசுபுரிந்த வனிதையர்
-
கற்பகத்தரு
-
ஈழத்தமிழர் உணவு
-
யாழ்ப்பாணத்துப் பழக்கவழக்கங்கள்