தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கரந்தை வெகுசன ஆக்கங்கள் : உரையாடல்கள் - விவரணங்கள்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
கலைமணி, கா
சந்திரிகா, ஜெ
சுந்தர், ம
தனஞ்செயன், த
பதிப்பகம் : பரிசல்
Telephone : 919382853646
விலை : 160.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 280
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

வெகுசன ஆக்கங்கள் புலவர், கவிஞர் என்ற தன்மையில் இருந்து விலகி சாதாரண மக்களின் சொற்களால் அமைந்துள்ளன. இதனால் வெகுசன ஆக்கங்கள் தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் இரண்டாம் நிலைத் தரவாகக்கூட கொள்ளப்படுவதில்லை. மாறாக, சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகளினால் கொல்லப்பட்டவர்கள் குறித்தும் உழைத்துக் களைத்த வெகுசனங்கள் குறித்தும் வெகுசனங்களின் கூத்து மற்றும் உடுக்கைப் பாட்டு முதலான கலைகள் குறித்தும் தரவுகளைக் கொண்டுள்ள இவ்வெகுசன ஆக்கங்கள் தவிர்க்க முடியாத ஆவணங்களாக உள்ளன. இந்த ஆவணங்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூல். 

 
உள்ளடக்கம்
  • அச்சுப் பண்பாடும் வெகுசன ஆக்கமும் - சில குறிப்புகள் - வீ.அரசு
  • நாட்டார் வீரர்கள் - ஜ.சிவகுமார்
  • தெருக்கூத்துப் பனுவல் - க.செந்தில்ராஜா 
  • விகட நூல்கள் - ப.திருஞானசம்பந்தம்
  • கீர்த்தனை - கு.கலைவாணன்
  • விலாசம் - கு.அரவிந்தன் 
  • வழிநடைப் பாடல்கள் - சா.பாரதி
  • கொலைச்சிந்து - மு.கஸ்தூரி
  • வில்லுப் பாட்டு - ஜெ.சந்திரிகா
  • உடுக்கையடிப் பாடல்கள் -த.தனஞ்செயன்
  • ஒப்பாரிப் பாடல்கள் - மு.காமாட்சி
  • மாந்திரிக நூல்கள் - மு.நஜ்மா
  • பஞ்சாங்கம் - அ.மோகனா
  • கைரேகை சாஸ்திரம் - வே.கண்ணதாசன்
  • சோதிடம் - வெ.பிரகாஷ்
  • தொடுகுறி சாஸ்திரம் - சோ.ராஜலட்சுமி
  • பஞ்சபட்சி சாஸ்திரம் - அ.லீமா மெட்டில்டா
  • மனையடி சாஸ்திரம் - மு.தேவராஜ்
  • சாமுந்திரிகா லட்சணம் - சு.சுஜா
  • காமசாஸ்திரம் - தே.சிவகணேஷ்
  • கோடாங்கிப் பாட்டு - ம.சுந்தர்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan