புகழ்பெற்ற நாடகாசிரியர் பிரெக்டிற்குப் பிறகு அரங்கத்தை அரசியல் சாராத கருத்தாடல்களாகவோ, வடிவமாகவோ, கலை - இலக்கிய அழகியல் சார்ந்து மட்டுமோ அணுகுவது இயலாத காரியம் ஆயிற்று. ஆனால் பல வகைகளில் அரங்கத்தின் அரசியல், அழகியல் கோட்பாடுகள் பண்டைய, மத்திய கால, நவீன கால மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டிவிட்டு பிரெக்டோடு நின்று விடுவது வழக்கமாகிவிட்டது. பிரக்டின் அரங்கியல் கோட்பாடுகளுக்குப் பிறகு உருவான, முக்கிய அசைவியக்கங்கள் இன்னமும் தீவிரமாக கவனத்தில் எடுக்கப்படவில்லை. அந்த முயற்சியை தொடங்கி வைப்பதே இந்நூலின் நோக்கமாகும். இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மூன்று மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
-
அரங்கம் : கோட்பாடும் நடைமுறையும் - மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
-
குரூர அரங்கம் - அந்தனின் ஆர்த்தோ ( Antonin Artaud )
-
ஆபிரிக்க அரங்க மொழி - கூகி வா தியாங்கோ ( Ngugi Wa Thiong'o )
-
ஒடுக்கப்பட்டோர் கவிதையியல் - அகஸ்தோ போவால் ( Agusto Boal )